Published on 10/06/2021 | Edited on 10/06/2021

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால் இன்று (10/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அனைத்து பிரிவுகளும் 50% பணியாளர்களுடன் செயல்படும். பணியாளர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் என சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தப்படுகிறது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.