Chennai High Court permanent judges take office today

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்கின்றனர்.

Advertisment

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி உள்ளிட்ட 9 பேர் பதவியேற்றனர். இவர்கள் அனைவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து அண்மையில் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்த நிலையில், 9 பேரும் இன்று பதவியேற்க உள்ளனர். தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

Advertisment

வழக்கறிஞர் சுந்தர் மோகன் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் புதிதாக கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.