Published on 15/12/2020 | Edited on 15/12/2020
சென்னை பனகல்மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் பாண்டியன் என்பவர் கண்காணிப்பாளராக உள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் இதுவரை ரூபாய் 1.37 கோடி மற்றும் 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் ரூபாய் 1.51 லட்சம் மதிப்பிலான வெள்ளி, ரூபாய் 5.40 லட்சம் மதிப்பிலான வைரமும் சிக்கியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையில் ரூபாய் 7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒரு கார், மூன்று இரு சக்கர வாகனங்களுடன் நிரந்தர வைப்பு நிதியாக ரூபாய் 37 லட்சம் இருப்பதையும் சோதனையில் கண்டறிந்துள்ளனர்.