
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான விவேகானந்தன் என்பவரின் மகன் காமராஜ் (35). தந்தை மகன் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்துள்ளனர். கடந்த 26 ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் காமராஜை படுகொலை செய்துவிட்டுத் தப்பியது.
இதுகுறித்து சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன் கிழமை கடலூர் J.M -3 நீதிமன்றத்தில், நீதிபதி ரகோத்தம்மனிடம் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட எண்ணூர், நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (25), இளந்தமிழன் (23), தினேஷ் (31), மனோ (எ) மணவாளன் (29), காந்தி (23) மற்றும் திருவள்ளூர் மாவட்டம், கவுண்டர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜமாலுதீன் (31) ஆகிய 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்களைப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கப்பட்டனர்.