உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தமிழ்நாட்டில் சென்னையில் கரோனாவின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,405 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,805, திரு.வி.க.நகர் 2,456, திருவொற்றியூர் 972, மாதவரம் 724, தண்டையார்பேட்டை 3,405, அம்பத்தூர் 901, தேனாம்பேட்டை 3,069, வளசரவாக்கம் 1,170, அண்ணாநகர் 2,362, அடையாறு 1,481, பெருங்குடி 481, சோழிங்கநல்லூரில் 469, ஆலந்தூர் 421, மணலி 383, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 333 பேர் என மொத்தம் 25,937 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.