Skip to main content

திருமணத்திற்கு மறுத்த காதலன்; கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நாடகமாடிய காதலி 

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

chengalpattu police control room  woman incident fake call

 

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர், தன்னை நான்கு இளைஞர்கள் காரில் கடத்திச் சென்று கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், அப்பெண்ணிடம் விசாரிக்கையில், அப்பெண் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் ரேவதி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பது தெரிய வந்தது. ரேவதி சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் பணி புரிவதாகப் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

 

தன்னுடைய தோழியை சந்திப்பதற்காக சைதாப்பேட்டையிலிருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருந்தபோது தன்னை காரில் கடத்திச் சென்ற 4 பேர் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் இதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் தொடர்பு கொண்ட போலீசார், அவர்கள் 4 பேரும் வெவ்வேறு பகுதிகளில் இருப்பது தெரிய வந்தது. மேலும் ரேவதி, போலீசார் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரேவதி மீது சந்தேகமடைந்த போலீசார், மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள மலையன்குளம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவரை ரேவதி கடந்த 3 மாத காலமாக காதலித்து வந்துள்ளார். 

 

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அழைத்ததன் பேரில் ரேவதி செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் சலீமுடன் பைக்கில் சென்று, வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். பின்னர் ரேவதி, சலீமை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு சலீம் மறுத்துள்ளார். எனவே சலீமை போலீசில் சிக்க வைக்க தன்னை 4 பேர் கடத்திச் சென்று கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்