Skip to main content

ஆகஸ்ட் 28, 29இல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

Chance of heavy rain on August 28, 29!


சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (25/08/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் நீலகிரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (25/08/2021) திண்டுக்கல், நீலகிரி, வேலூர் திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிவரை மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்.

 

சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை பெய்யலாம். தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சாவூர் - 14 செ.மீ., பள்ளிப்பட்டு - 9 செ.மீ., திருத்தணியில் 6 செ.மீ மழை பதிவானது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்