Skip to main content

குரூப்-1- தமிழ் வழியில் படித்தவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Certificate verification for those who have studied Group-1- Tamil way!

 

குரூப்- 1 முதல்நிலை தேர்வெழுதியவர்களில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று (23/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேர்வாணையத்தால் கடந்த 03/01/2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி- 1)- ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள், தமிழ் வழியில் பயின்றுள்ளதாகத் தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரி, தமிழ் வழியில் முதல் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி பயின்றதற்கான சான்றுகளை 16/08/2021 முதல் 16/09/2021 வரை இணையவழி பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்ற சான்றிதழ்களைச் சரி பார்ப்பதற்கு உரியச் சான்றிதழ்களோடு குறிப்பாணையில் குறிப்பிட்டுள்ள தேதி/ நேரத்தில் தேர்வாணைய அலுவலகத்திற்கு வருகைபுரியும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 


1.பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை,
2.மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு. 
3.பட்டப்படிப்பு.

 

இது குறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். இதைத் தவிரத் தேர்வாணைய இணையதளம் மூலமாகவும், இது குறித்த குறிப்பாணையினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்". இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்