திருச்சி புனித சிலுவை கல்லூரியின் 100ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. 1923ம் ஆண்டு துவங்கப்பட்ட புனித சிலுவை கல்லூரி, ஜி தோப்பு பகுதியில் அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். நேற்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர்கள் தொண்டைமான் சுஜாதா மற்றும் தற்போதைய திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமைச்சர் கே.என் நேரு, அடுத்த 101வது வருட விழாவில் நிச்சயம் தமிழக முதல்வரை அழைத்து வந்து சிறப்பித்துத் தருவதாக உறுதி அளித்தார். இந்த கல்லூரியில் பயின்ற அநேகமான பெண் ஆளுமைகள் இன்றும் சமுதாயத்திற்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகின்றனர்.அதிலும் இந்தக் கல்லூரியில் பயின்ற திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் சுஜாதா என்னை மிரட்டி அந்த மேயர் பதவியை வாங்கினார் என்று நகைச்சுவையாகப் பேசினார். பின்னர் நூறாவது ஆண்டுக்கான பொழுதுகள் 100 என்ற சின்னம் வெளியிடப்பட்டது.