Skip to main content

'தலைவி' படத்தை எதிர்த்த வழக்கு... ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

Case against 'Talaivi' movie ... J Deepa's petition dismissed!

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரணாவத் நடிக்கும் 'தலைவி' என்ற தமிழ்ப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'குயின்' என்ற இணையதள தொடரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கியிருக்கின்றனர்.

 

தன் அனுமதியில்லாமல் எடுக்கப்படும் ‘தலைவி’, ‘ஜெயா’, ‘குயின்’ ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக்கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (16.04.2021) பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை உறுதிசெய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்தது.

 

Case against 'Talaivi' movie ... J Deepa's petition dismissed!

 

ஏற்கனவே, இந்த வழக்கில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் எனக் கூறும் தீபா, அவர் உயிருடன் இருந்தபோது தன்னால் சந்திக்க முடியவில்லை என பலமுறை கூறியிருந்ததையும், ‘தி குயின்’ என்ற பெயரில் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எந்த உரிமையும் இல்லாமல், உள்நோக்கத்துடன் தீபா தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்