/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A43443.jpg)
மரம் சாய்ந்து விழுந்ததில் காரில் சென்ற வங்கியின் மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூரைச் சேர்ந்த வாணி என்பவர் கேகே நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் மேனேஜராகப் பணியாற்றி வந்தார். இவர் பணி முடித்துவிட்டு, தனது காரில் தங்கை எழிலரசியுடன் புறப்பட்டார். வங்கியில் இருந்து 100 மீட்டர் தொலைவுச் சென்ற போது, சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று, கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியதால் வாணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓட்டுநர் கார்த்திக்கும், தங்கை எழிலரசியும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், நொறுங்கிய காரில் இருந்த வாணியின் உடலை மீட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு தலைமைப் பொது மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர்.
மிகப்பெரிய மரம் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)