மின்சார வாரியத்தில் 5,318 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உட்பட என மொத்தம் 5,318 இடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து வெளியான அந்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. கணினி வழி தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், கட்டணமும் திருப்பித் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்கள் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என்பதால் இந்த அறிவிப்பானை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மின்சார வாரிய அறிவிப்பாணை ரத்து!
Advertisment