தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்துவரும் நிலையில் இன்று போக்குவறத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் மீது பேசிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இன்று அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பேருந்துகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்ற ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் அது தற்பொழுது 5 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பள்ளி வாகனங்களுக்கு முன்னால் பின்னால் கேமராவுடன் கூடிய சென்சார் கருவி பொருத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.