Skip to main content

பம்பர் வழக்கு; மாநில அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்! 

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Bumper case; State government must strictly enforce - High Court!

 

நான்கு சக்கர வாகனங்களின் பம்பர் பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் 'ஏர் பேக்' (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது என நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த மத்திய அரசும் தடை விதித்தது. மத்திய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொது மக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கூட இது போன்ற தடை செய்யப்பட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தது. இதையடுத்து, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், 5 ஆயிரம்  ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனப் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். 

 

அதேசமயம், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு  அமர்வு முன்பு இன்றுவரை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பம்பர்களால் வாகன விபத்து ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை என்றும், வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 1980 முதல் வாகனங்களில் பம்பர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பம்பர், வாகனங்களுக்கான கூடுதல் வசதி மட்டுமே என்றும் தெரிவித்தார்.

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிக அவசியம் என்று கருத்து தெரிவித்தனர். பம்பர் பொறுத்திய வாகன ஓட்டுனர்கள் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள் எனக் குறிப்பிட்டனர். பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இது மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின் உத்தரவை மாநிலம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மாநில அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.