Skip to main content

மாட்டுவண்டியில் மணமக்கள் ஊர்வலம்... வியந்த பொதுமக்கள்...

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது வெள்ளாளப்பாளையம். அங்கு வசிக்கும் விவசாயி சரவணபவனின் மகன் கவிஅரவிந்த் பட்டதாரி வாலிபர். அதேபோல் அருகே உள்ள கிராமமான எறங்கட்டூரில் வசிக்கும் விவசாயி செல்வகுமாரின் மகள் பிரவீனா. கவிஅரவிந்திற்கும் பிரவீனாவிற்கும் நிச்சயம் செய்யப்பட்டு இன்று காலை பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. 

 

திருமணத்திற்கு பிறகு வழக்கமாக மணமக்கள் காரில் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த புதுமண தம்பதிகளை முதலில் மணமகன் வீட்டுற்கும், பிறகு மணமகள் வீட்டிற்கும் மாட்டு வண்டியில் அழைத்து சென்றனர். நாட்டு மாடுகளை வைத்து வண்டி பூட்டி ஊர்வலமாக சென்றனர். மணமக்கள் வண்டி முன் செல்ல உறவினர்கள் மேலும் எட்டு மாட்டு வண்டிகளில் தொடர்ந்து சென்றனர். மணமக்களின் இந்த மாட்டு வண்டி ஊர்வலம் கோபி பகுதி பெருமக்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுபற்றி இரு குடும்பத்தினரும் கூறும்பொழுது, நமது பாரம்பரிய முறைப்படி பண்பாடு கலாச்சாரம் காக்கப்பட வேண்டும். இப்போதெல்லாம் நவீன மேற்கத்திய கலாச்சாரத்திற்கு நாம் ஆட்பட்டுவிட்டோம். ஆகவே பண்பாட்டை வலியுறுத்தி இந்த இளைய சமுதாயம் நமது பாரம்பரிய முறைகளை அறிந்துகொள்ள வேண்டும் அதனை வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும். இதற்காகத்தான் முந்திய காலத்தில் நாம் பின்பற்றிய வழக்கத்தை எங்கள் வீட்டு திருமணத்தில் செய்தோம் என்றார்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.