திருச்சி கே. சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் துணை பதிவாளராக பணிபுரிந்து வருபவர் கோகிலா. இவர் திருச்சி கே.கே நகர் காவல்துறையில் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், திருச்சி கே.கே. நகர், பழனி நகரைச் சேர்ந்த ஜெப பாப்பளி என்பவரின் இடத்தை வேறு சிலர் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ய முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும், அந்தப் புகாரில் திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த கருப்பையா(35), மேலகல்கண்டார்கோட்டை சேர்ந்த பீட்டர் என்பவரது மனைவி ஆரோக்கியமேரி (59), புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (52), திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (41) ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தைப் பதிவு செய்ய முயற்சி செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையா மற்றும் ராம்குமார் ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.