Skip to main content

காலிஃப்ளவர் பக்கோடாவில் 'ரத்த பேண்டேஜ்' - பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு?

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

'Blood bandage' on cauliflower fry

 

சென்னையில் உணவு சீர்கேடு தொடர்பாக இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

 

ஒன்று, சென்னை திருநின்றவூரில் காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொன்று கொரட்டூரில் இரவுக்கடையில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னை திருநின்றவூரில் சிடிஎச் சாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் ஷைலாபானு என்பவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கியுள்ளார். அதனை தனது மகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மகளின் வாயில் ஏதோ ஒன்று சிக்க, எடுத்துப்பார்க்கையில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த புகாரையடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆய்வாளர் வேலவன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை கொரட்டூரில் இரவுக்கடை ஒன்றில் பரோட்டா சாப்பிட்டுவந்து உறங்கிய  கல்லூரி மாணவர் சிபி, மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவர் சிபியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இந்த உயிரிழப்புக்குப் பரோட்டா காரணமா என்பது தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர்.

 

'Blood bandage' on cauliflower fry

 

'Blood bandage' on cauliflower fry

 

அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த தாரணி என்ற சிறுமி, வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் மற்றும் ரஸ்னா வாங்கி குடித்த நிலையில், குடித்த சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்டு உடல் நீல நிறத்தில் மாறி சிறுமி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

udanpirape

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.