Skip to main content

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்பு நிற உடை அணிந்த வீரர்கள் பாதுகாப்பு!

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

Black-clad soldiers protect Tamil Nadu Chief Minister MK Stalin!

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தமது காரில் இருந்த தேசியக் கொடி மற்றும் இலட்சினையை முதலமைச்சர் அகற்றினார். 

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, தமிழக அமைச்சர்கள் தங்கள் அரசு பயன்பாட்டு கார்களைத் தவிர்த்துவிட்டு, சொந்த கார்களில் பயணிக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களும் பூட்டப்பட்டு விட்டனர். 

 

தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கடைபிடிக்கும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமது காரில் இருந்த தேசியக் கொடி மற்றும் தமிழக அரசின் இலட்சினையை அகற்றிவிட்டு, அண்ணா அறிவாலயம் சென்றார். இதனிடையே, சஃபாரி உடை அணிந்த பாதுகாப்பு படை வீரர்களுடன், கருப்பு நிற உடை அணிந்த சிறப்பு பயிற்சிப் பெற்ற பாதுகாப்புப் படை வீரர்களும் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் இணைந்துள்ளனர்.

 

கடந்த நான்கு நாட்களாக ஏகே95 ரக துப்பாக்கியுடன் தாங்கள் யாரைக் கண்காணிக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்க கருப்பு நிற கண்ணாடியும் அணிந்தவாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்