Skip to main content

அதிமுகவின் அடையாளத்தை 'கபளீகரம்' செய்த பாஜக!

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

The BJP, which has embraced the AIADMK identity

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டி என்பது ஆளும் அ.தி.மு.க. கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணிக்கும் தான். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூன்ஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.தி.மு.க மற்றுமுள்ள கட்சிகள் அவர்கள் போட்டியிடாத இடங்களிலும் தங்களின் கொடி மற்றும் கரைவேட்டி, துண்டு போன்ற அடையாளத்துடன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கிறார்கள், களப்பணியாற்றுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளிலும் அங்கு தேர்தல் பணியில் ஈடுபடும் அ.தி.மு.க.வினரின் சுய அடையாளத்தைக் காட்டாமல் அவர்களுக்கும் காவி உடை அணிய வைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களைக் காவிப் படையாக மாற்றிவிட்டது. பா.ஜ.க. 

 

குறிப்பாக மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் அரவக்குறிச்சி, தாராபுரம், மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடுகிறது. இதில் கோவை தெற்கு தொகுதியைத் தவிர பா.ஜ.க.வுக்கு தொண்டர்களோ, அமைப்பு பலமோ மற்ற மூன்று தொகுதிகளிலும் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.வினர் தான் பா.ஜ.க.வுக்கு வேலை செய்கிறார்கள். இதில் தான் பா.ஜ.க.வின் சூது வெளிப்படையாகத் தெரிகிறது. பெயர் சொல்ல விரும்பாத (தற்போது சீட் கிடைக்காத) சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் வேதனையுடன் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

"கொங்கு மண்டலத்தில் உள்ள இந்த நான்கு தொகுதிகளிலும் பா.ஜ.க தனியாக நின்றால் ஒவ்வொரு தொகுதிகளிலும் இரண்டாயிரம், ஐயாயிரம் அதிகபட்சம் பத்தாயிரம் வாக்குகளைத் தான் அவர்களால் பெறமுடியும். ஆனால் இப்போது அ.தி.மு.க.வின் ஒட்டு வங்கியான 30 சதவீதத்தை அப்படியே பெறப் போகிறார்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.கவினர் பா.ஜ.க.வுக்காக களப் பணியாற்றுகிறார்கள். எங்களது ஊராட்சி கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், நாங்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த பூத் கமிட்டியினர், அதாவது ஒரு பூத்துக்கு ஆண்கள் 25, பெண்கள் 25 பேர் என எல்லோரையும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் முதல் பதவி பொறுப்புக்குத் தகுந்தாற்போல் சிலருக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம் வரை வேட்பு மனுத் தாக்கலுக்கு அடுத்த நாளே பா.ஜ.க.வினர் வாரி வழங்கி விட்டனர். அது தவிர ஒவ்வொரு நாளும் செலவுக்குத் தனியாக தந்து விடுகிறார்கள். இதுதவிர ஒரு ஒட்டுக்கு தலா இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை தாராளமாகக் கொடுக்கிறார்கள். பா.ஜ.க தொகுதிகளுக்கு பலகோடி ரூபாய் கர்நாடகாவிலிருந்து தான் இறக்குமதியானது. இப்படியெல்லாம் கொடுத்து எங்க நிர்வாகிகள், தொண்டர்களை பணத்தால் மயக்கி மக்களிடம் எப்படி ஒட்டு கேட்க வைத்திருக்கிறார்கள் பாருங்கள்? அதாவது நம்ம ரெட்டை இலை சின்னம் தான் இப்ப தாமரை... இனி தாமரை தான் நம்ம சின்னம். ரெட்டை இலைக்கு பதிலா தாமரை தான் எனப் பிரச்சாரம் செய்ய வைத்திருக்காங்க. கூட்டணிக் கட்சி சின்னம்னு எங்கேயும் சொல்றதில்லே. மொடக்குறிச்சியில பூந்துறையில இருக்குற தலித் காலனியில ஒட்டுக் கேட்கும்போது ஒரு மூதாட்டி ஏப்பா எம்.ஜி.ஆரு, ஜெயலலிதாம்மா சின்னம் தானே ரெட்டை இலை அது இல்லையானு கேட்டது, அதுக்கு எங்க ஆளுக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா சின்னமான ரெட்டை இலை தான் இப்போ தாமரை சின்னம்னு அந்தம்மாவுக்கு புரிய வெச்சாங்க. சரி பா.ஜ.க. ஓட்டு வாங்கறதுக்குத்தான் இப்படியெல்லாம் பேச வைக்குதுனு ஒதுங்க முடியலே.

 

The BJP, which has embraced the AIADMK identity

 

காரணம் எங்க நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லோருக்குமே காவித் துண்டு போட்டு விட்டார்கள். கருப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை என்ற கரை போட்ட துண்டுகள் யார் கழுத்திலும் இல்லை. சிலர் வேட்டியே காவி கலர்லே தான் கட்டிகிட்டு வர்றாங்க அந்த அளவுக்கு பணம் கொடுத்து மூலை சலவை செய்திட்டாங்க. ஓட்டுக் கேட்க போகும் போது அ.தி.மு.க. அடையாளமான துண்டு அணியாமல் காவித் துண்டு போடுவது வேதனையளிக்கிறது. பாருங்க தாராபுரத்துல பிரதமர் மோடி கலந்துகிட்ட கூட்டத்துல கூட முதல்வர், துணை முதல்வர் கலந்து கிட்டாங்க, அனா அதுல கூட அ.தி.மு.க.அடையாளம் இல்லாமல் எல்லாமே காவி மயமாகத்தான் இருந்தது. 

 

இவுங்க தேர்தலே ஜெயிக்கறாங்களோ, தோக்கறாங்களோ.. ஒன்னுல உறுதியா ஜெயிச்சுட்டாங்க அ.தி.மு.க. நிர்வாகிகள், அடிமட்ட தொண்டன், வாக்காளர்கள் வரை எல்லோரையும் காவி மயமாக்கிவிட்டனர். இவர்கள் போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமைப்பு பா.ஜ.க.வுக்குள் கலந்துவிட்டது. இது ஒன்னரை கோடி தொண்டன் உள்ள அ.தி.மு.க.வுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது" எனப் பரிதாபமாகக் கூறினார். 

 

வெற்றி, தோல்வி ஒரு புறம் இருந்தாலும் காவியும், தாமரையும் கிராமங்கள் தோறும் கொண்டு சென்றதும் அ.தி.மு.க.வினர் பலரை பா.ஜ.க. சிந்தனைக்குக் கொண்டுவந்து இந்த தேர்தல் மூலம் அமைப்பு ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது பா.ஜ.க. என்பதை மறுப்பதற்கில்லை. இதுகுறித்து பாஜகவினருடன் சென்ற அதிமுக தொண்டர்களிடம் கேட்டபோது, ''இப்படிப்  எங்களை குறைசொல்லும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜக கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை என்றால் தோப்பு வெங்கடாச்சலம் மாதிரி முடிவெடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தத் தொகுதியில் அதிமுகதான் போட்டியிட வேண்டும் என போராடி கட்சித் தலைமையிடம் வாங்கியிருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டார்கள். இப்பொது எங்களைக் குறை சொல்லுகிறார்கள். தேர்தல் பணிகளைக் கவனிக்க கட்சி மேலிடம் எங்களைப் போன்ற நிர்வாகிகளுக்குக் கொடுக்குமாறு ஒரு தொகையைக் கொடுத்தது. அதனை அதிமுக போட்டியிடாத தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்ஏக்களும், எம்.பிக்களும் எங்கள் கண்ணில் காட்டவில்லை. பஸ் செலவுக்கோ, பைக்கிற்கு பெட்ரோல் போடவோ, டீ செலவுக்கோ, சாப்பாடு செலவுக்கோ காசு வேண்டுமா வேண்டாமா? எங்களைக் குறைசொல்லும் நிர்வாகிகள், அவர்களே முன்னின்று பிரச்சாரத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டியதுதானே. அப்படி எங்களை அழைத்துச் சென்றிருந்தால், இப்படி அவர்கள் புலம்பத் தேவையில்லை. நாங்கள் தொண்டர்கள். எப்பொழுதும் எம்.ஜி.ஆர் விசுவாசியாக, ஜெயலலிதா விசுவாசியாக இருப்போம். எங்களைக் குறைசொல்லும் மூத்த நிர்வாகிகள் பாஜகவுக்கு மாறாமல் இருந்தால் சரி'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.