மசாலா பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாட்டில் முன்னணியில் உள்ள நிறுவனமான 'சக்தி மசாலா' நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி- டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோரின் பீமரத சாந்தி விழா, பெருந்துறை சென்னிமலை கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் செப்டம்பர்- 8 மற்றும் செப்டம்பர்- 9 ஆம் தேதிகளில் நடந்தது.
இந்த வைபவத்தை, பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான அர்ச்சகர் செல்வசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். அதிகாலையில் கோ பூஜை, சூரிய நமஸ்காரத்துடன் துவங்கி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் கலச தீர்த்த அபிேஷகம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோதானம் மற்றும் பவளமணி தாரணம் ஆகியவை, தம்பதியர் இருவருக்கும் நடத்தப்பட்டது.
இதில் முக்கிய நிகழ்வான பவளமணி தாரணத்தை பிரபல நடிகர் சிவகுமார்- லட்சுமி சிவகுமார் தம்பதியர் அணிவித்தனர். அதைத் தொடர்ந்து, விழா மலரை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். அதேபோல், டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், அரிமா.என்.முத்துசாமி, டாக்டர் பி.ஜி.விஸ்வநாதன்- முத்துலட்சுமி விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் காந்தி, சாரதா காளிமுத்து, எஸ்.கே.ஆர்.குமார் மற்றும் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் தம்பதியரை ஆசீர்வாதம் செய்தனர்.
மேலும் முக்கிய பிரமுகர்களான ரமேஷ்- பிரபா தம்பதியினர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி அலாவூதீன், பரணி பாலு தம்பதியினர், டாக்டர் கணபதி குடும்பத்தினர், கேசவன் தம்பதியினர், டாக்டர் அருணாதேவி, டாக்டர் மங்கள், டாக்டர் அஞ்சு தம்பதியினர், டாக்டர் செந்தில்வேலு தம்பதியினர் ஆசிர்வாதம் வழங்கினர்.
செப்டம்பர் 8- ஆம் தேதி அன்று மாலை சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குனர் செந்தில்குமார், பெற்றோரைப் போற்றி உருவாக்கிய குறும்படம் தீபா, சுவாமி, சுருதி, செங்கதிர் வேலன் பாடிய பாடல்கள் மற்றும் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் கடந்து வந்த பாதையை ஒளி, ஒலி காட்சியாக திரையிட்டனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இவர்களது மகள் சக்திதேவி, மருமகன் இளங்கோ, மகன் செந்தில்குமார், மருமகள் தீபா, மைத்துனர் வேணுகோபால், கெளசல்யா தம்பதியினர், பேத்திகள் சுவாமி, சுருதி, பேரன் செங்கதிர் வேலன் ஆகியோர் செய்திருந்தனர்.