Skip to main content

தடை செய்யப்பட்ட பயோடீசல் மீண்டும் புழக்கத்தில்..?

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

l banned Biodiese came for acirculation

 

இந்திய முழுவதும் பயோடீசல் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்து, அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதித்துள்ளது. தற்போது தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பயோ டீசல் விற்பனை துவங்கியுள்ளது. பயோ டீசல் என்பது குருடாயில் என்று சொல்லப்படும் கழிவில் மண்ணெணய் கலந்து பயன்படுத்துவது. கச்சா எண்ணெயின் இறுதி கழிவான அதில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஆயில், லாரி உள்ளிட்ட கனரக டீசல் இன்ஜின் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

 

ஆனால், இந்த ஆயில் பயன்படுத்தும் வாகனங்களில் உள்ள பம்புகள் பழுதடைவதால், இதனை தமிழக அரசு தடை செய்தது. தற்போது கரூர் பகுதிகளில் உள்ள குவாரிகளில் இந்தப் பயோடீசல் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சரக்கு லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகளும் சிறிய அளவில் லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகளும் இந்தப் பயோ டீசலை பயன்படுத்துகின்றனர். இதனால் அரசு நடத்தக்கூடிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்டவை மூலம் விற்பனை செய்யப்படும் சுத்தமான டீசல் விற்பனையாகாமல், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை தருகிறது. 

 

இந்தப் பயோ டீசல் முழுமையாக மத்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்தும் ஆந்திரா, கோவா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் நள்ளிரவில் தமிழகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, சில குறிப்பிட்ட டீலர்கள் அதனை 50க்கும் அதிகமான பேரல்களில் நிரப்பி வைத்து, அவர்களுடைய குவாரிகளுக்குப் பயன்படுத்துவதோடு விற்பனையும் செய்கின்றனர். தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 86 ரூபாய் என அரசு நிர்ணயித்திருக்கும் நிலையில், இந்தப் பயோ டீசலின் விலை 74 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 12 ரூபாய் விலை குறைவாக விற்கப்படும் இந்தப் பயோடீசலை மட்டுமே லாரி உரிமையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

 

லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி, 35 லிட்டர் - 50 லிட்டர் கேன்கள் மூலம் அவற்றை சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். டீசல் என்ஜின் பயன்படுத்தக்கூடிய நான்கு சக்கர இலகுரக வாகனங்கள், கார் உள்ளிட்டவை இந்தப் பயோ டீசலைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பயோ டீசல் பயன்பாட்டைத் தடுக்கவும், அவற்றின் கொள்முதலை தடை செய்யவும் தமிழகம் முழுவதும் உணவு கலப்பட தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

அதில் 3 டிஎஸ்பிக்கள், ஆந்திரா மற்றும் கோவாவில் இருந்து கொண்டு வரப்படும் பயோ டீசலை தமிழகத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் பயோ டீசல் வாங்கி மொத்தமாக விநியோகிக்கும் ஏஜென்டுகள் ஆகியோரிடமிருந்து மாதம் தவறாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனைப் பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் அனுமதி அளித்துள்ளனர். அதிலும், 200 முதல் 500 வரையிலான சரக்கு லாரிகள் வைத்திருக்கக்கூடிய முதலாளிகளோடு நேரடி தொடர்பில் இருக்கக்கூடிய டிஎஸ்பிக்கள், சட்டரீதியாக எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு தயாராகவும் உள்ளனர். எனவே மத்திய அரசும், தமிழக அரசும் இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுமா?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.