கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகன் கனகராஜ், உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, இரண்டு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து பிரித்து வைத்துள்ளனர். இந்நிலையில், கனகராஜ் வர்ஷினி பிரியாவை கடந்த வாரம் தனது தந்தை கருப்பசாமியிடம் அழைத்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, கனகராஜின் தந்தை அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.
வினோத்
இதற்காக, அவர்கள் இருவரையும் வெள்ளிப்பாளையம் அருகே ஓர் இடத்தில் தங்கவைத்துள்ளார். கடந்த மூன்று தினங்களாக கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதனிடையே நேற்று மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற அவரது அண்ணன் வினோத், பட்டியலின பெண்ணை திருமணம் செய்ய கூடாது என தம்பி கனகராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சராமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து, கை மற்றும் தலை பகுதியில் பலத்த வெட்டுபட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வர்ஷினி பிரியாவையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், வர்ஷினி சிகிச்சை பெற்று வருகிறார். வர்ஷினி உயிர் பிழைப்பதற்கு, 10 சதவிகிதம் தான் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
கொலை செய்த வினோத், மேட்டுப்பாளையம் போலீஸிடம் இன்று காலை சரணடைந்தார்.இந்நிலையில் வர்ஷினி பிரியாவின் குடும்பதாருடன் 30 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அம்மனுவில் கொலை குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது உடன் இருந்த எவிடன்ஸ் கதிர் கோவை மண்டலத்தை ஆவணக் குற்றங்கள் நடைபெறும் மண்டலமாக அறிவிக்க வேண்டும், பாதிக்க்ப்பட்ட பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் ஐம்பது லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.