உலகில் நாம் எவற்றையெல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகவும், மரணத்தை தழுவும் நோயாகவும் நினைத்து கொண்டிருந்தாலும், மன உளைச்சல் தான் மிகப்பெரிய நோயாக மாறி உள்ளது. அதிலும் காவலா்களின் தற்கொலைகள் பெரும்பாலும் மன உளைச்சல் மட்டுமே காரணமாக உள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள அய்யம் பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் தினேஷ்குமார் (40), கடந்த 2011 ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சோ்ந்தவா்.
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது ஒருவரை அடித்தது தொடா்பாக அவா் மீது மனித உரிமை ஆணையம் வழக்கு தொடா்ந்தது. அதனால் அவா் அங்கிருந்து பாபநாசம் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
குடும்பத்துடன் பாபநாசம் வந்து சோ்ந்தவா் 1 மாத கால மருத்துவ விடுப்பில் இருந்துவிட்டு மீண்டும் அவா் பணியில் சேரும்போது அய்யம்பேட்டை காவல்நிலையத்திற்கு மாற்றி பணியமா்த்தபட்டார்.
இதனிடையே வருகின்ற கடந்த 20ஆம் ஆம் தேதி நேரில் ஆஜா் ஆக வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் இவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் அவா் அங்கு செல்லாமல் அன்றைய தினம் அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் பணிக்கு சோ்ந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (20.11.2020) ரோந்து பணியில் இருக்கும் போது சாலையின் ஓரத்தில் வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்த்து அந்த ஊரை சேர்ந்தவா்கள் அவரை அழைத்து சென்று வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனா். அன்று இரவே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் எலிக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டுள்ளார் என்பதை உறுதி செய்து அவருக்கு தொடா்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருடை இரத்தத்தில் விஷம் அளவுக்கு அதிகமாக கலந்ததால் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (22.11.2020) உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரித்ததில், திருநெல்வேலி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு தாழ்த்தபட்ட சமூகத்தை சோ்ந்தவரை வழக்கு தொடா்பாக விசாரித்ததில் அவரை அடித்ததாகவும், அதுக்குறித்து மனித உரிமை ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கால் அவா் பலமுறை அலைக்கழிக்கப்பட்டதோடு, இடமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் அவா் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டும், அந்த வழக்கு தொடா்பாக அவரை நேரில் ஆஜராக சொல்லி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
மேலும் இவருக்கு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 10 வருடங்கள் கழிந்தும் இதுவரை குழந்தை இல்லாததால் பல மருத்துவா்களை பார்த்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.
இந்த இரு பிரச்சனைகளும் தான் அவருடைய மன உளைச்சலுக்கு காரணம் என்று கூறுகின்றனா்.
தற்கொலைக்கு முக்கிய காரணமாக கருதபடும் மனஉளைச்சலால் இவரை போன்ற பல காவலா்கள் உயிரிழந்துள்ளனா்.
எனவே காவலா்களுக்கு என்று மனநல மையங்கள் மூலம் அவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி அவா்களின் மன இருக்கத்தை குறைத்தால் மட்டுமே தற்கொலைகளை தடுக்க முடியும். பலரது பிரச்சனைகளுக்கு தீா்வும் காண முடியும். இதுவும் நமக்கு ஒரு பாடம்.