ஜூலை 22 இல் பயணத்தை தொடங்கிய சந்திரயான்-2 இன்று அதிகாலை 1.30 மணிக்குநிலவின் தென்துருவத்தில் இறங்க தயாரானது.அப்போது சந்திரயான் -2 வின் விக்ரம் லேண்டர் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது. 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர்இருந்தபொழுது தகவல் தொடர்பை இழந்தது என இஸ்ரோவிலிருந்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியான நிலையில்சற்றுநேர பரபரப்பிற்கு பின் 2.1 கிலோ மீட்டர் வரைதான் சிக்னல் கிடைத்ததாக இஸ்ரோ இயக்குனர் சிவன் அறிவித்தார்.

isro

Advertisment

சந்திரயான்-2 90 சதவிகிதம் வெற்றியடைந்தாலும் நிலவில் தரையிறக்கப்படும் நிகழ்வில் தகவல் தொடர்பை இழந்தநிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்களும், ஆதரவுகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''நாங்கள் உங்களோடுஇருக்கிறோம்'' என நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Advertisment