Skip to main content

சமூகப் பணியாளர், ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

tt

 

சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் ஆகிய இரு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக பணியாளர் (Social Worker) மற்றும் ஆற்றுப்படுத்துநர் (Counsellor) ஆகிய இரண்டு பணியிடத்திற்குமே உளவியல் (Psycology), சமூகவியல் (Sociology), சமூகப்பணி ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குழந்தைகள் சார்ந்த பணிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவசியம். 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இவ்விரண்டு பணியிடங்களுக்கும் மாதம் 14 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும். 

 

ஆற்றுப்படுத்துநர் பணிக்கு, கணினி இயக்கும் திறனும் அவசியம். இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை. ஓராண்டு ஒப்பந்தத்திற்கு உட்பட்டது. இது, மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும். ஆகையால், இதை அடிப்படையாகக் கொண்டு எந்த விதத்திலும் அரசுப்பணி கோர இயலாது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள், தங்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை வரும் ஜூலை 11ம் தேதி மாலை 5.45 மணிக்குள், 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அறை எண். 415, நான்காவது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636001, தொலைபேசி எண். 0427 - 2415966,' என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பிட வேண்டும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்