கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு புகார் வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 22- ஆம் தேதி அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சென்னை, கரூர் உள்ளிட்ட 26 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, கடந்த ஜூலை 30- ஆம் தேதி அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இருப்பினும், விசாரணைக்கு நேரில் ஆஜராக அவகாசம் கோரியிருந்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இந்த நிலையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமை அலுவலகத்தில் வரும் அக்டோபர் 25- ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகுமாறு, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.