Anti-corruption summons to MR Vijayabaskar

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி அன்று சென்னை, கரூர் உட்பட 20 இடங்களில் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும், முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூபாய் 25.56 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணம், பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment