எம்.ஜி.ஆர். இறந்து 35 ஆண்டுகளான பிறகும், சின்ன எம்.ஜி.ஆர்., கருப்பு எம்.ஜி.ஆர்., ஜுனியர் எம்.ஜி.ஆர்., நாமக்கல் எம்.ஜி.ஆர். எனப் பலருக்கும் ‘எம்.ஜி.ஆர். அடையாளம்’ தேவைப்படுகிறது.
கட்சியில் ‘திராவிடம்’ இல்லாத தேசியக் கட்சியான பா.ஜ.க.வும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரான எம்.ஜி.ஆர். பெயரை, தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குச் சூட்டியிருப்பது விந்தையாக உள்ளது.
அண்ணாமலை கருப்பு எம்.ஜி.ஆராம். மதுரையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்துக்கு கருப்பு ‘எம்.ஜி.ஆர். அழைக்கிறார்’ எனப் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதுவும், சினிமா போஸ்டர் போல இருக்கிறது. அதில், கருப்பு உடையில் ஒருபுறம் அண்ணாமலை, இன்னொரு புறம் போலீஸ் கெட்டப்பில் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் ஆகிய இருவரும் பைக் ஓட்டுகின்றனர். வித்தையும் விளையாட்டுத்தனமும் நிறைந்த தமிழக பா.ஜ.க.வின் இதுபோன்ற செயல்பாடுகளை காமெடி கணக்கில் சேர்த்து, சிரிக்கப் பழகிவிட்டது பொதுஜனம்!