Skip to main content

புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை! அன்புமணி இராமதாஸ்

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
anbumani ramadoss



புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

உலகை காப்பாற்ற வரலாற்றில் முன் எப்போதும் இருந்திராத அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அக்டோபர் 8 ஆம் நாள் தென் கொரியாவில் வெளியிடப்பட்ட, ஐ.நா. காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக்குழுவின் சிறப்பு அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. 

 

 காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவினர் இரு ஆண்டுகளாக தயாரித்து கடந்த 8-ஆம் தேதி தென் கொரியாவில் வெளியிட்ட ‘‘வெப்பநிலை 1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ள நிலையிலேயே பெரும் பாதிப்புகள் நேருகின்றன. அடுத்த 12 ஆண்டுகளில் இந்த வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசை எட்டிப்பிடிக்கும். அதனால் வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களின் தாக்குதல் மென்மேலும் அதிகரிக்கும். புவிவெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்திப்போம். அதுவே 2 டிகிரி செல்சியல் அளவை கடந்துவிட்டால், சமாளிக்கவே முடியாத பேரழிவுகளை உலகம் எதிர்க்கொள்ள வேண்டும்’’ என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

காலநிலை மாற்ற பேராபத்துகளை குறைக்க பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டுக்கு மிக விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவற்றால் வெளியாகும் கரியமிலவாயுவை  2050 ஆம் ஆண்டில் முற்றிலுமாகக் ஒழிப்பது அவசியமாகும். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை செயலாக்குவதற்கான விதிமுறைகளை வகுப்பதற்காக வரும் திசம்பரில் போலந்து நாட்டில் நடைபெறும் ஐநா காலநிலை மாநாட்டில் உறுதியான முடிவுகளை மேற்கொள்ள இந்த சிறப்பு அறிக்கை வழிவகுக்கும். 

 

காலநிலை மாற்றமும் அது குறித்த ஐநா செயல்பாடுகளும் எங்கோ நடக்கும் நிகழ்வுகள் அல்ல. இவை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் வாழும் ஒவ்வொருவரையும் பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும். இப்போது மட்டுமல்லாமல், இனிவரும் தலைமுறையினரையும் காலநிலை மாற்றம் பாதிக்கும். உலகில் மிக மோசமான பாதிப்புகளை எதிர்க்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஐநா சிறப்பு அறிக்கை எச்சரித்துள்ளது. உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு 1 டிகிரி செல்சியசாக இருந்தாலும், இந்தியாவில் அது 1.2 டிகிரி செல்சியசாக உள்ளது. இதனால் புயல், வெள்ளம், வறட்சி, உணவு உற்பத்தி பாதிப்பு உள்ளிட்டவை இந்தியாவில் மிகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

 

எனவே, இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஒருபக்கம் காலநிலை மாற்றத்தால் தீவிரமடையும் இயற்கை சீற்றங்களை எதிர்க்கொள்ளும் தகவமைப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மறுபக்கம், காலநிலை மாற்றத்துக்கு காரணமாகும் கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை பொருத்தவரை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை சமாளிப்பதற்கான தகவமைப்பு செயல்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சென்டாய் பேரிடர் கட்டமைப்பு  அடிப்படையில் ஒருங்கிணைந்த பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மேலும், தண்ணீர் பற்றாக்குறையைத் தடுக்க நீர் மேலாண்மைக்கான முழுமையான திட்டங்களை வகுக்க வேண்டும்.
 

கரியமிலவாயு வெளியாகும் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுப்போக்குவரத்து வசதிகளை, குறிப்பாக பேருந்து வசதிகளை அதிகமாக்குதல், திடக்கழிவு மேலாண்மையை அறிவியல் பூர்வமாக கையாளுதல், தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடையை மும்முரமாக செயலாக்குதல், புதிய கட்டடங்களை பசுமை கட்டடங்களாக அமைக்க வழிசெய்தல், சூரிய ஆற்றலையும் காற்று ஆற்றலையும் முழுமையாக பயன்படுத்துதல் என பல வழிகளிலும் தமிழ்நாட்டில் கரியமிலவாயு அளவை குறிக்க வழி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் கரியமிலவாயு வெளியாவதை அதிகரிக்கும் திட்டங்களான ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெட்ரோகெமிக்கல் திட்டங்களை கைவிட வேண்டும். மேலும், கரியமிலவாயுவை குறைக்க வழிசெய்யும் இயற்கை வளங்களை காப்பாற்றவும், பசுமை பகுதிகளை அதிகமாக்கவும் வேண்டும்.
 

இவ்வாறு, ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று பட்டு, பசுமையான, இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறைக்கு மாற முன்வர வேண்டும். அதற்கான கட்டமைப்புகளையும் விதிமுறைகளையும் உருவாக்குவது தமிழக அரசின் தலையாய பணியாக இருக்க வேண்டும்.  மேலும், இந்த ஆண்டு போலந்து நாட்டில் நடக்கும் ஐநா காலநிலை மாநாட்டில், காலநிலை மாற்றத்தை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தும் உறுதியான முடிவுகளை எடுக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.