Skip to main content

கரும்பு நிலுவைத் தொகை வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு -   கரும்பு விவசாயிகள் எச்சரிக்கை! 

Published on 14/02/2019 | Edited on 14/02/2019
am

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையில், கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான கரும்பு அறுவை தொகை பாக்கியை,  கடந்த 13 மாதங்களாக விவசாயிகளுக்கு தரவில்லை.   மேலும் வட்டி தொகையையும் ஆலை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. 


இது குறித்து பல முறை போராட்டங்கள் நடத்தியும்,  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எவ்வித பயனும் இல்லாததால் கரும்பு விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஆலை நிறுவனத்தின் பொது மேலாளர் சந்திக்க வேண்டும் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  


பின்னர் துணை பொது மேலாளர் பேச்சுவார்த்தையில் நடத்தி சமரசத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் கரும்பு விவசாயிகள் வருகின்ற 19 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆலை நிர்வாகத்தினை  முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு மத்திய மாநில அரசுகள் மற்றும் ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவைத்தொகை பாக்கியை வழங்காவிட்டால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாக விவசாயிகள் புறக்கணிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதுவும் பேசக் கூடாது” - குஷ்புவிற்கு அம்பிகா கண்டனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
ambika condemn kushboo speech

சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, ஆர்ப்பாட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது, “தமிழகத்தில் எவ்வளவு போதைப் பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கொடுக்கப் போகிறார். இன்றைக்கு தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மூத்த நடிகை அம்பிகா, “எதுவாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும்.. எந்த கட்சியாக இருந்தாலும் சரி... ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ.. ஏற்றுக்கொண்டு பாராட்ட வேண்டும். அப்படி பாராட்ட முடியாவிட்டால் எதுவும் பேசக் கூடாது. இழிவான வார்த்தைகளையும் பயன்படுத்தகூடாது. எதற்காக பிச்சை என்ற வார்த்தையை சொல்லணும். 5 ரூபாய் கூட அவர்களுக்கு உதவும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

" சிறார் என்றாலும் 100 வயது முதியவராக இருந்தாலும்..." - அம்பிகா காட்டம்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

actress ambika tweet about crimes

 

நடிகை அம்பிகா திரைத்துறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது குணச்சித்திர கதாபாத்திரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். 

 

அந்த வகையில் தற்போது பாலியல் குறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை காவல் துறை ட்விட்டர் பக்கத்தில், புனித தோமையர்மலை காவல் நிலையத்தில், 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த சம்பவம் குறித்து அம்பிகா, "பாலியல் குற்றங்களில் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவே யார் தொந்தரவு கொடுத்தாலும் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சிறார் அல்லது 100 வயது முதியவர்களாக இருந்தாலும் வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் குற்றமே" என தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு காவல் துறையும் நன்றி தெரிவித்து பதில் பதிவிட்டிருந்தது.