Skip to main content

குளக்கரையில் குவிந்த பக்தர்கள்..! மகாளய அமாவாசை. (படங்கள்)

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

 

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசையான இன்று மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் ஏராளமான பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரிய குறைகளை அகற்றும் சிறிய பிரமிடுகள்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

 Small pyramids that eliminate large defects 

 

பிரமிடுகள் பற்றிய பல செய்திகளை நாம் படித்திருக்கிறோம். அவை வாஸ்து குறைகளை எப்படி அகற்றுகின்றன என்பதை சுருக்கமாக இங்கு காண்போம்.

 

பிரமிடுகள் உலோகம், கண்ணாடி, மரம், பிளாஸ்டிக் போன்றவற்றால் பல அளவுகளிலும் வடிவங்களிலும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும் புண்ணிய தேச மணல், மண், கல், புல்லுருவி இலைச் சாறு, மூலிகைச்சாறு, கடல் சிப்பியில் எடுக்கப்பட்ட சுண்ணாம்புப் பொடி ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரமிடுகள் மிகச்சிறந்தனவாகும்; மிக வேகமான நற்பலன் தருவனவாகும்.

 

உலோகம் என்றால் மின்சாரத்தை உட்கொள்ளும் சக்தியுடையது. அதைவிட மின் அதிர்வுகளை உள்வாங்காத பிரமிடுகளே அதிக பலன் தரும் எனலாம். எட்டுத்திக்கிலும் அதிக நன்மைகளை உருவாக்கித் தரும் அஷ்டமோஹனப் பிரமிடுகளை - எட்டுத் திக்குகளில் அவை இருக்கவேண்டிய இடங்களில் வைத்துக்கொண்டால் அதிக நன்மைகளைப் பெறலாம்.

 

வடதுருவ - தென்துருவ காந்த ஈர்ப்பு சக்தியிலிருந்து இருப்பிடத்தையும் கட்டடங்களையும் வாஸ்து ரீதியாக காப்பாற்றவே பிரமிடுகள் உபயோகிக்கப்படுகின்றன. எல்லா வாஸ்து தீமைகளுக்கும் கட்டடங்களை இடித்து மாற்றுவது இயலாது. குறிப்பாக, அடுக்குமாடி கட்டடங்களில் அது இயலாத காரியம். எனவே, சிறிய பிரமிடுகளைக் கொண்டு அதை நிவர்த்தி செய்யலாம்.

 

நல்ல நிறங்கள் கொண்ட பிரமிடுகள் மிகச்சிறந்தவை. அவற்றை இருக்க வேண்டிய இடத்தில் வைத்துக்கொண்டால் தேவையற்ற கவலைகள் படிப்படியாக மறையும். இவை இன்ஸ்டன்ட் காப்பி போன்றதல்ல, உடனேயே பருகுவதற்கு. பிரமிடுகள் மெல்ல மெல்ல நன்மைகளுக்குத் துணை வருவதை உணரலாம்.

 

நான்கு பக்கங்கள் கொண்ட பிரமிட் எல்லாவற்றுக்கும் பொதுவானது. ஐந்து பக்கமும் உச்சி முனையும் கொண்டவற்றை வீட்டின் பிரம்ம பாகத்தில் (மையத்தில்) இருக்கச் செய்தால், பஞ்சபூத கெடுதிகள் நம்மை அண்டவிடாமல் பாதுகாத்து, தீமைகளை அவை உள்வாங்கிக் கொள்ளும். ஆறு பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிட், இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள திசைகளைச் சீர்செய்து, நோய் நொடி வராமல் தடுக்கும். வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவு, உத்தியோகச் சிக்கல் போன்ற இன்னல்களை அகற்றி பாதுகாப்பு தரும்.

 

ஏழு பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிட், தடைப்பட்ட திருமணங்களை விரைவில் நடைபெறச் செய்யும். அன்பு சார்ந்த; காதல் சார்ந்த வேதனைகளை இந்த பிரமிட் போக்கும். எட்டு பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிட், அட்ட திக்குகளில் இருந்து ஏற்படும் எல்லா தீய சக்திகளையும் உள்வாங்கி, அது இருக்குமிடத்தில் எந்தக் கெடுதல்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் வல்லமை படைத்தது. வீட்டின் மாடியிலோ அல்லது கட்டடத்தின் உயரமான பாகத்திலோ இருக்கச் செய்தால் எல்லா இடர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றிவிடும். வெண்மை நிறம்தான் இதற்குச் சிறந்தது.

 

ஒன்பது பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிடை கல்விக் கூடங்கள், பயிற்சி தரும் இடங்கள், தியானம், யோகா போன்ற ஆத்மசாதனை புரியும் இடங்களில் வைத்துக்கொண்டால், தங்கு தடையின்றி எல்லா காரியங்களையும் முயற்சிகளையும் வெற்றி பெறச்செய்யும். மஞ்சள் வண்ணம் ஏற்றது.

 

கிழக்கு பாகத்திற்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட பிரமிட் சிறந்தது. ரோஸ்வுட், கருந்தேக்கு, கடம்பு, ஒய்ட் சிடால் மரங்கள் ஏற்புடையவை. தென்கிழக்கில் செம்பிலான சிறிய பிரமிட் அல்லது சுத்த வெண்மைநிற பிரமிடை சற்று உயரமான இடத்தில் வைத்துக்கொண்டால், மனவேறுபாடுடைய தம்பதிகள் கூட வெறுப்புணர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வாழ்வார்கள். அந்த இடத்தில் சமையல் கூடம் இருந்தால் உணவுக்குரிய தானியங்கள் எப்போதும் வேண்டிய அளவு இருந்து கொண்டேயிருக்கும். தெற்கு பாகத்தில் சிவப்புநிற மர பிரமிட் ஒன்பது இஞ்ச் அளவில் இருப்பது சிறப்பானது. 18 இஞ்ச் அளவில் பெரிய பிரமிட் இருப்பது மிக நல்லது. அது கருஞ்சிவப்பாக இருந்தால் மிகவும் நல்லது. உயரிய பலனைப் பெற்றுத்தரும்.

 

தென்மேற்கில் பிளாஸ்டிக் பிரமிட் இருந்தாலும் பாதகமில்லை. இதன் முனையை வடக்கு- தெற்காக வைத்துக்கொண்டால் அதிவேகமான செயல்திறனைப் பெற்றுத்தரும். மேற்கு பகுதியில் மூன்று இஞ்ச்சில் செம்பினாலான பிரமிட் அல்லது பிரவுன் கலர் பிரமிட் இருப்பது நன்மைகளைத் தரும். அதைவிட மேற்கை ஆளும் சனி பகவானுக்குரிய நீலநிற பிரமிட் சாலச்சிறந்தது.

 

வடக்கு பாகத்தில் தங்கநிற ஆறு இஞ்ச் பிரமிட் வைத்துக்கொள்வதால் நன்மைகளைப் பெறலாம். வடக்கு சுவரின் பக்கத்தில்தான் வைக்க வேண்டும். வடமேற்கில் 12 இஞ்ச் அளவில் வெள்ளி பிரமிட் அல்லது வெள்ளிநிற பிரமிட் வைப்பது மிகச்சிறப்பானது. இதனை கப்போர்ட் போன்ற இருட்டான இடத்தில் வைப்பது கூடாது. வடகிழக்கு பகுதியில் கெடுதலுக்குரிய பிரமிட் அமைந்துவிட்டால் அதிகமான குறைகளைத்தான் சந்திக்க நேரிடும். எனவே, இங்கு ஒரு சிறு புது மண்குடுவையில் நீரை நிரப்பி வைத்துக்கொண்டாலே போதும். இங்கு வைக்க புண்ணிய தேச மணலில் உருவாக்கிய பிரமிட்தான் சிறப்பானது.

 

பிரமிடுகள் ஏன் வேண்டும்?
பிரமிடுகள் கி.மு. 332 முதல் 3,100 வரை மண்ணுலகில் முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளதாம். உலகில் பெரிய பிரமிட் மெக்சிகோவில் கிட்டதட்ட 45 ஏக்கரில் 117 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டதாம். எகிப்தில் 480 அடி உயர பிரமிட் 13 ஏக்கரில் உருவாக்கப்பட்டதாம். நம் பாரதத்தில் கோபுரக் கலசம் வைப்பதன் அடிப்படை, கோபுரங்களை இயற்கை சீற்றத்திலிருந்து காப்பாற்றத்தான். அந்த அடிப்படையிலேயே பிரமிடுகள் செயல்படுகின்றன. எனவே, சிறிய பிரமிடுகளால் அதிக நன்மைகளை நாம் பெற இயலும்.

 

--பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

 

 

Next Story

விபூதி பூசுவதால் ஏற்படும் நன்மைகள்; விபூதி பற்றிய சுவாரசிய தகவல்கள்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Benefits of applying vibhuti; Interesting facts about Vibhuti

 

கோவிலில் இறைவனை தரிசனம் செய்த பிறகு பிரசாதமாக விபூதி கொடுக்கப்படுகிறது. விபூதி கொடுத்து ஆசீர்வாதம் செய்வது காலங்காலமாய் நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு வழக்கம். கோவில்களில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விபூதியை அணிந்து கொள்பவர்களை தீமைகளிலிருந்து காப்பாற்றும் கவசமாக இருந்து பிரச்சினைகளைப் போக்கி செல்வத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.

 

விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருளுண்டு. விபூதியை நாம் தரித்துக்கொள்ளும்பொழுது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோ அணிந்துகொள்ள வேண்டும். வலக்கையின் நடுவிலுள்ள மூன்று விரல்களால் விபூதியை பவ்யமாக எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ள வேண்டும். காலையிலும், மாலையிலும் கோவிலுக்குச் செல்லும்பொழுதும், இரவு படுக்கப் போகும் முன்பும் விபூதி போட்டுக் கொள்ளலாம்.

 

விபூதி பூசும்பொழுது வெள்ளை நிற விபூதி மட்டுமே பயன்படுத்த வேண்டும். விபூதியைப் பயன்படுத்தும்பொழுது நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ பயன்படுத்தக் கூடாது. ஆசாரியார், சிவனடியார்களிடமிருந்து விபூதி வாங்கும்பொழுது அவர்களை வணங்கி வாங்கவேண்டும். வாயைத் திறந்து கொண்டும், பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.

 

விபூதி, இரட்சை, சாரம், பஸ்மம், பசிதம், திருநீறு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. விபூதியை தண்ணீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் தீருமென்பது இன்று வரைக்கும் இருக்கக் கூடிய ஒரு நம்பிக்கை. திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டபொழுது, அவருடைய தமக்கையார் வயிற்றில் விபூதி பூசி குணமடையச் செய்த வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது.

 

விபூதியை உச்சியில் தரிப்பதன் மூலமாக கண்டத்துக்கு மேல் செய்த பாவம் நீங்குமெனவும், விபூதியை நெற்றியில் தரிக்கும்பொழுது நான்முகனால் எழுதப்பட்ட கெட்ட எழுத்துகளின் தோஷம் நீங்குமெனவும், விபூதியை மார்பில் தரிக்கும்பொழுது மனதினால் செய்த குற்றம் விலகுமெனவும், விபூதியை நாபியில் தரித்தால் பீஜத்தினால் செய்த தோஷம் நீங்குமெனவும் சொல்லப்படுகிறது.

 

விபூதியை முழந்தாள்களில் தரித்தால் கால்களால் செய்த பாவம் நீங்குமெனச் சொல்லப்படுகிறது. விபூதியை முதுகின் கீழுள்ள முச்சந்தியில் தரித்தால் சூதத்தினால் செய்த பாவம் விலகுமெனவும், விபூதியை புயங்களில் தரித்தால் அந்நிய மாதரிடம் தவறாக நடந்த பாவம் நீங்குமெனவும், நம்முடைய கையிலுள்ள கட்டை விரலால் விபூதியைத் தொட்டு அணியும்போது தீராத சிலவகை நோயானது நம்மிடம் வந்து சேரும் எனவும் சொல்லப்படுகிறது.

 

நம்முடைய சுட்டுவிரல் மூலமாக விபூதியை எடுத்துப் பூசும்பொழுது பொருட்கள் நாசம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறது. நம்முடைய நடுவிரல் கொண்டு விபூதி எடுத்துப் பூசும்பொழுது வாழ்க்கையில் நிம்மதியில்லாத சூழல் ஏற்படுமாம். சுண்டு விரலைக்கொண்டு விபூதியை எடுத்துப் பூசும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் கிரக தோஷங்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

 

மோதிர விரல் மற்றும் கட்டைவிரல் சேர்த்தபடி விபூதி எடுத்துப் பூசும்பொழுது, இந்த உலகம் நம் வசம் வரும். நாம் செய்யக் கூடிய எந்தவொரு செயலும், முடிவும், முயற்சியும் மிகப்பெரிய வெற்றியாகும் எனச் சொல்லப்படுகிறது. கோவிலில் இறைவனை தரிசித்ததும் விபூதி பிரசாதத்தை வாங்கும்போது இடக்கையைக் கீழேவைத்து வலக்கையை மேலே வைத்து வாங்கவேண்டும்.

 

விபூதியை இடக்கையால் வாங்கவோ அணியவோ கூடாது என்பது சாஸ்திரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விபூதியை இரு புருவங்களுக்கிடையில் வைக்கும்பொழுது அது மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. அதிர்வுகளை உள்வாங்கும் சக்தி விபூதிக்குண்டு எனச் சொல்லப்படுகிறது. மிகவும் சிறந்த கிருமி நாசினியாகவும், நெற்றியில் வடியும் வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் விபூதியைச் சொல்கிறார்கள்.

 

கிராமங்களில் பிறந்த குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டியதும் உச்சந்தலையில் விபூதி வைப்பார்கள். இப்படி வைக்கும் பொழுது அந்த விபூதி தலையில் இருக்கக் கூடிய ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும் என்பதை அன்றே நம்முடைய முன்னோர்கள் கண்டறிந்து அதை ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்திக் கொண்டுள்ளார்கள். திருமணமாகாத பெண்கள் விபூதியைக் கழுத்தில் பூசி வரும்பொழுது விரைவில் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் கிட்டுமென சொல்லப்படுகிறது.

- கவிதா பாலாஜிகணேஷ்