Skip to main content

திருநாவுக்கரசர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் 

Published on 08/09/2018 | Edited on 08/09/2018

 

Thirunavukkarasar



வரலாறு காணாத வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்திய மக்கள் விரோத மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 10.09.2018 திங்கள்கிழமை நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் நடத்துவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .

Next Story

ராகுல் காந்தியை பிரதமராக்க முழு மூச்சுடன் பாடுபடுவோம்; காங்கிரஸ் தீர்மானம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Congress resolution that we will strive make Rahul Gandhi the Prime Minister

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65ஆவது வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது. திருச்சி  தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை பாராளுமன்ற தொகுதிதி தேர்தல் பொறுப்பாளர் பெனன்ட் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் எம்பி கலந்து கொண்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65 ஆவது வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன ஆணைக்கான கடிதங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அவர்களோடு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நடைபெறவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில், சோனியா காந்தி ஆசியோடு தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, ராகுல் காந்தியை பிரதமராக்க அயராது உழைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு அதிக இளைஞர்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு கிளைகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும். கட்டமைப்பை வலுப்படுத்தினால் கட்சியும் வளரும். எனவே கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து அயராது பாடுபட வேண்டும்” என்றார்.