Skip to main content

அலைபாயுதே பட பாணி வாழ்க்கை - கர்ப்பிணி மகளை எரித்துக் கொலை செய்த அப்பா! 

trishy

 

 

திருச்சியில் பேக்கரி தீவிபத்தில் சிக்கியதாக முதலில் பரபரப்பாக பேசப்பட்ட கர்ப்பிணி பெண் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து அலைபாயுதே பாணியில் பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டே கர்ப்பிணியானது தெரிந்தும் மகளை  ஆத்திரத்தில் பெற்றோர் எரித்து கொலை செய்ய முயற்சித்தார்களா என மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்றது. 

 

திருச்சி பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் இவர் அப்பகுதியில் ரொம்ப காலமாகவே பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி மல்லிகா இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதல் திருமணம் செய்தவர்கள் இவர்களது மகள் சுவாதி (27). 

 

இவர் திருச்சியில் சிறப்பு காவல் படை போலீசில் பணியாற்றும் தங்கவேல் திருச்சி எடத்தெரு பகுதிக்கு அடிக்கடி வரும் போது பேக்கரியில் இருக்கும் சுவாதியை பார்த்த்தும் காதலிக்க ஆரம்பித்து காதல் வீட்டிக்கு தெரியாமல் அலைபாயுதே காதல் போன்று கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி வீட்டிற்கு தெரியாமல் முறைப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார்கள். 

 

திருமணம் ஆனாலும் தன் தாயின் வீட்டிலே இருந்தாலும் அடிக்கடி காதல் திருமணம் செய்த கணவரை பார்க்க அடிக்கடி வெளியே செல்வாராம் இதன் விளைவு சுவாதி 8 மாத நிறைமாத கர்ப்பிணி ஆனால் வயிறு பெரிதாக வீட்டிக்கு தெரியாமல் இருக்க எவ்வளவோ முயன்றும் கடைசியில் தாயிடம் உண்மையை சொல்லி எப்படியும் அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி கொடுங்க என்று கெஞ்சியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பாவிற்கு விசயம் தெரிந்தவுடன் வீட்டில் பெரிய ரகலையே நடந்திருக்கிறது. பிரச்சனையின் கடைசியில் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் என்று சொல்லி பிரச்சனையை தள்ளி போட்டிருக்கிறார் அப்பா சேகர். 

 

 

வீட்டில் பிரச்சனையை பேசி விட்டேன். விரைவில் என்னுடைய பெண்ணை உங்க வீட்டிற்கு அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி சுவாதியின் தாய் தன் மருமகன் வீட்டிற்கு சென்று சொல்லிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். 

 

அப்போது கடையில் இருந்திருக்கிறார் சேகர். ஏற்கனவே தனக்கு தெரியாமல் திருமணம் செய்திருப்பதை கேள்வி பட்டு ஆத்திரத்தில் இருந்த சேகர். தன் மகள் 8 மாத கர்ப்பம் என்பதை தெரிந்ததும் இன்னும் ஆத்திரப்பட்டிருக்கிறார். இதற்கு இடையில் இன்று தனக்கு தெரியாமல் மகளும் தாயும், காதலன் வீட்டுக்கு சென்றிருப்பதை கேள்விப்பட்டு  ஆத்திரம் அடைந்து இருவரையும் தீ வைத்து கொளுத்திவிட தீர்மானித்து ஏற்கனவே பெட்ரோல் வாங்கி பேக்கரி முழுவதும் ஊற்றி கையில் அவர்கள் உள்ளே நுழைந்ததும் லைட்டரை வைத்து கொன்று விட தயாராக இருந்திருக்கிறார். 

 

sen

 

வழக்கம் போல் தாய், மகள் இருவரும் கடைக்கு வந்திருக்கிறார்கள். இரவு 10.30 மணியளவில் கடையை மூடும்போது அப்பா சேகர் மகளை அழைத்து அந்த பிரிட்ஜ்ஜை திறந்து ஒரு பொருளை எடுக்க சொல்லியிருக்கிறார். அப்பா சொன்னதை கேட்டு சென்று சுவாதி ஃபிரிட்ஜை திறந்தாராம்.  இதில் ஸ்வாதி மீதும், அவரது தாய் மல்லிகா மீது தீப்பிடித்தது. அப்போது வந்த சேகர் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்வது போல் நடித்து லேசான காயமடைந்தாராம். அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு திருச்சி ஜிஹெச்சில் அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த ஸ்வாதி, மல்லிகா இருவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்புத்துறையினர் கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். 

 

 

தகவலறிந்த ஸ்வாதியின் கணவர் தங்கவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. 

 

இந்நிலையில் திருச்சி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்று ஸ்வாதி, மல்லிகா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினார். ஸ்வாதி எட்டு மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு தாய் மல்லிகா சிகிச்சை பலம் அளிக்காமல் இறந்து போனார்.

 

மகள் சுவாதியும் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற அரசு மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

 

கைதான சேகர், நேற்று மாலை திருச்சி 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வீட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் சேகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்