AIADMK general body in a while ... OPS in the campaign vehicle ...!

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகதொண்டர்கள் கூடியுள்ள நிலையில்,எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து வானகரம் புறப்பட்டுள்ளார்.அவருக்கு வழிநெடுக அதிமுகதொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

Advertisment

அதேபோல் கோமாதா பூஜைக்கு பிறகு ஓபிஎஸ்சும் வானகரம் புறப்பட்டார். தேர்தல் பிரச்சார வாகனத்தில் புறப்பட்டஓபிஎஸ்ஸுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். கற்பூரம் ஏற்றி கும்ப கலச மரியாதை செய்து மகளிர் அணியினர் வரவேற்றனர்.