![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/WDmw-aIomHlCpJ_K1h6OA3lHG73HYe3K-uMPk3Sg1NU/1608544795/sites/default/files/inline-images/1234890_4.jpg)
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர இருக்கிறது. இதற்கான அனைத்துக்கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக சார்பில் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. திமுக சார்பில் அக்கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். பாஜக சார்பிலும் அமித்ஷா சில ஆலோசனைகளை தமிழகம் வந்த போது நடத்தினார். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறிய நிலையில், பாஜக தரப்பில் இதுவரை எந்த பதிலும் சொல்லப்படவில்லை.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் விரைவில் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 9ம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 27ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பங்கேற்கும் பரப்புரை கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.