அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.சி. பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், "அ.தி.மு.க. தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்ற அ.தி.மு.க. நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்துக்கு எதிராக விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி செயல்படுகின்றனர். எனவே, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு இன்று (03/12/2021) மதியம் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வரவுள்ளது.