Skip to main content

7 மாதத்துக்கு பிறகு எச்.ராஜா மீது வழக்கு  –குழப்பத்தில் திமுக நிர்வாகிகள்

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
ர்ர்ர்

 

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் காவல்துறை கட்டுப்பாட்டை மீறி ஊர்வலம் நடத்துவேன் என்றவர் காவல்துறை மற்றும் நீதித்துறையை மிக மோசமாக விமர்சனம் செய்தார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகிறது. சென்னை உயர்நீதிமன்றமும் தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 8ந்தேதி, கவிஞர் வைரமுத்துவை விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் சென்னையில் நடைபெற்ற ஒருக்கூட்டத்தில் எச்.ராஜா பேசும்போது, இந்து மதத்தை சேர்ந்த இளைஞர்கள் தூண்டிவிடும் வகையிலும், இஸ்லாமிய மதத்தை தீவிரவாத மதம் எனப்பேசி மதக்கலவரத்தை தூண்ட முயற்சி செய்தார். கிருஸ்த்துவ மதம் தொடர்பாக அவதூறாக பேசி இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிறார். தமிழகம் முழுவதும் நடைபெறும் கூட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்மென திருவண்ணாமலை நகர திமுக பொருளாளர் சீனுவாசன் என்பவர் ஜனவரி 15ந்தேதி புகார் தந்துயிருந்தார்.

 

அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர் போலிஸார். இந்நிலையில் திடீரென கடந்த 20ந்தேதி எச்.ராஜா மீது பழைய வழக்கை தூசு தட்டி எடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர் திருவண்ணாமலை நகர காவல்துறையினர். வழக்கு பதிவு செய்த தகவல் திமுக வழக்கறிஞர் சீனுவாசன்க்கு போலிஸார்க்கு தெரியப்படுத்த அவர் மூலமாக திமுக நிர்வாகிகளக்கு தெரியவர ஆச்சர்யமாகியுள்ளனர். ஏற்கனவே போட்ட கேஸ்லயே கைது செய்யல. இப்ப எதுக்கு நாம தந்த வழக்கில் 7 மாதத்துக்கு பிறகு எதுக்கு எப்.ஐ.ஆர் போடறாங்க எனத்தெரியாமல் குழம்பியுள்ளனர்.

 

காவல்துறை மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவுப்படி எச்.ராஜா மீது யாராவது புகார் தந்து வழக்கு பதிவு செய்யாமல் இருந்தால் அந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் எனக்கூறியதன் அடிப்படையில் செப்டம்பர் 20ந்தேதி இரவு 9 மணிக்கு  153 ஏ, 295 ஏ, 505(2) என்கிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

குட்கா ராஜேந்திரன் என டீஜீபியை விமர்சனம் செய்தார், நீதிமன்றத்தை பெரிய மயிறா என்றார், வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து எச்.ராஜாவை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடுகிறோம் என்கிறது போலிஸ். ராஜாவோ அவருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் பாஜக பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். வழக்கெல்லாம் வேகவேகமாக தான் பதிவு செய்கிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் அவமானப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் காவல்துறையினர் என்கின்றனர் இதனை நோக்கும் எதிர்கட்சியினர்.

சார்ந்த செய்திகள்