அதிமுகவில் நிர்வாக வசதிக்காக கட்சி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதேபோல அதிமுக அமைப்பு செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ்- இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, புத்திசந்திரன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் நிர்வாக வசதிக்காக 11 அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஏற்கனவே 56 அமைப்பு ரீதியான மாவட்டங்கள் இருந்த நிலையில், தற்போது 67 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 11 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளது அதிமுக. அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக விவசாய பிரிவு, மருத்துவ அணி ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக அமைச்சர் மாஃபா பாண்டியனும், அதேபோல் பாப்புலர் முத்தையா, நடிகை விந்தியா ஆகியோர் கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.