Skip to main content

சிவாஜி மகன் பா.ஜ.க.வில் இணைந்தார்! (படங்கள்)

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

 

நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார் பா.ஜ.க.வில் இணைந்தார். 

 

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், நடிகருமான ராம்குமார், அவரின் மகன் துஷ்யந்துடன் பா.ஜ.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற சி.டி.ரவி., பா.ஜ.க.வில் இணைந்ததற்காக உறுப்பினர் அட்டையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் நிர்வாகிகள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், குஷ்பூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

இதனிடையே, நேற்று (10/02/2021) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகர் பிரபு, "நானும், என் மகனும் எந்தக் கட்சியிலும் இல்லை. அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்