
கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக டெல்லி பயணம், விழாவில் பங்கேற்றது, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது, தொடர்ந்து நண்பர்கள் சந்திப்பு, வாழ்த்து பெற்றது என இருந்தார். டெல்லி பயணம், தலைவர்கள், நண்பர்கள் சந்திப்பு என இருந்தநிலையில் சென்னை திரும்பினார். தலைச்சுற்றல்காரணமாகக்கடந்த 28தேதி சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று நாள் சிகிச்சைக்கு பின்தற்போது அவர்டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளார்.
இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. சில நாட்களில் அவர்டிஸ்சார்ஜ்செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர்டிஸ்சார்ஜ்செய்யப்பட்டு போயஸ்கார்டனில்உள்ள அவரதுஇல்லத்திற்குச்சென்றார். அவரது குடும்பத்தினர் சிகிச்சை முடிந்து வந்தரஜினிகாந்த்தைமகிழ்ச்சியாக வரவேற்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)