Published on 01/12/2021 | Edited on 01/12/2021
![கதச](http://image.nakkheeran.in/cdn/farfuture/CrG1K9aMm9UIOKaopd5LyPrWndyO0LHYP7lVo-vqGvA/1638353332/sites/default/files/inline-images/kamal_126.jpg)
நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா பாதிப்பு முற்றிலும் குணமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான இருமல் இருந்து வந்துள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனைக்காகப் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி முதல் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார், 10 நாட்கள் கடந்த நிலையில் தற்போது அவர் கரோனாவில் இருந்து முழுவதும் குணமடைந்துள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.