இன்று (01/05/2022) நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி, திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.