
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற 90 லட்சம் ரூபாய் பணத்தை பயணியிடம் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புதுச்சேரி செல்லக்கூடிய விரைவு ரயிலில்ஏறுவதற்காக வந்த நரேஷ் என்ற நபரிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அவரது உடைமைகளைச் சோதனையிட்ட பொழுது, அவரது பையில் ஆவணம் இன்றி கொண்டு வந்த 90 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சிவராம் என்ற நபர் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)