முத்தையா முரளிதரன் பட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் இதில் நடிக்க இருந்த விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது மகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு அளிக்கப்பட்ட மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலியல் மிரட்டலில் ஈடுபட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதை தற்போது சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்துள்ளனர். இலங்கையிலிருந்து அந்த ட்வீட் பதிவாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பாலியல் மிரட்டல் விட்ட அந்த நபரை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடியுள்ளது சைபர் கிரைம்.