நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் சுமார் 300 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட 6 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ளது சங்கர் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி. இந்த கல்குவாரியில் நேற்று இரவு ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் சிக்கி கொண்டனர். சுமார் 300 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட ஆறு தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஊழியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்திய நிலையில் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஹெலிகாப்டர் உதவியுடன் கல்குவாரி சிக்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குவாரியில் சிக்கிக் கொண்ட ஊழியர்களின் உறவினர்கள் மீட்கப்பட்டு விடுவார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆறு தொழிலாளர்களின் முருகன், விஜய் என்ற இரண்டு தொழிலாளர்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள நான்கு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.