Published on 06/12/2021 | Edited on 06/12/2021
கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப் பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போது வரை கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளை செலுத்தி போராடி வருகிறது ஒவ்வொரு நாட்டு அரசுகளும். தற்பொழுது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.