Published on 14/06/2021 | Edited on 14/06/2021
![hj](http://image.nakkheeran.in/cdn/farfuture/sjnKfWO9nUg5uoc9EiQSurFmR9EOxoGy0LPmvjfWTMo/1623691967/sites/default/files/inline-images/123456_6.jpg)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த எந்த விஷயமும் அதிமுகவில் நடைபெறாத காரணத்தால் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசி வருகிறார். கடந்த இரண்டு வாரத்தில் இதுவரை 40 ஆடியோ பேச்சுக்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது 41வது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், " கட்சியை தலைமையேற்று வழி நடத்த நிச்சயம் வருவேன், இதுபோன்ற சூழலை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். என்னை யாராலும் தடுக்க முடியாது. விரைவில் உங்களை சந்திப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.