Skip to main content

‘2020ஆம் ஆண்டு 40பேர்... 2021ஆம் ஆண்டில் 68பேர்’-அதிரடி நடவடிக்கையில் காவல்துறை ஆணையர்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

‘40 people in 2020 ... 68 people in 2021’- Commissioner of Police in action

 

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் விஜய் என்பவர் பாலக்கரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். இவர் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதே போல் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் ஜெகதீஷ் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசன் கைது செய்தனர். இவர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

எனவே விஜய் மற்றும் ஜெகதீஷ் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் அளிக்கப்பட்டது. தற்போது திருச்சி மாநகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு 40 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். நடப்பு 2021 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் அறுபத்தி எட்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையர் தகவல் அளித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்