![2.43 lakh people travel by government bus from Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/6WUoA1JgKBHyd4WAT_c_yRUv8ThhTkKOBfRJNuuQPjw/1634232505/sites/default/files/inline-images/bus_35.jpg)
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து 2.43,900 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதபூஜை விடுமுறையைக் கருத்தில் கொண்டு மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் அக்டோபர் 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் சிரமமில்லாமல் பயணிக்கவும், கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் என மூன்று மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
வழக்கமாக இயக்கப்பட்ட 4.722 பேருந்துகளுடன் சேர்த்து 700 சிறப்பு பேருந்துகள் உட்பட 5,422 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், அக்டோபர் 12- ஆம் தேதி அன்று 1,44,855 பயணிகளும், அக்டோபர் 13- ஆம் தேதி அன்று 99,045 பயணிகளும் பயணித்தனர். இதில் வட மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு கூடுதலாக பயணிகள் பயணம் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்தி 15,000 பேர் பயனடைந்ததாகவும், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் போது, இதே அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.