Skip to main content

கூட்டுறவு வங்கியில் 2.39 கோடி போலி நகைக்கடன்கள்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

2.39 crore fake jewelery loans in Co-operative Bank!

 

கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூபாய் 2.39 கோடி அளவில் போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆரணி இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

 

இதுகுறித்து ஆரணி இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் 2.39 கோடி ரூபாய் அளவில் போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 77 நபர்களுக்குப் போலி நகைக்கடன்கள் வழங்கியதற்தாக ஆரணி வங்கிப் பணியாளர்கள் மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக ஆரணி வங்கி மேலாண் இயக்குநர் கல்யாண்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், போலி நகைகளை வைத்து மோசடி செய்தவர்களின் பெயர், பெற்றுக்கொண்ட தொகை குறித்த அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வட்டியில்லா கடன் என நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி; பெண் மீது போலீசில் புகார்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

 Fraud by buying jewelry as an interest-free loan; A police complaint was filed against the woman

 

வட்டி இல்லா கடன் என்ற பெயரில் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக திருவாரூரில் பெண் ஒருவர் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் நகைகளை பெற்றுக் கொண்டு வட்டி இல்லாமல் பணம் தருவதாக தெரிவித்தார். நானும் வங்கியில் அடகு வைத்திருந்த 13 பவுன் வகையை மீட்டு அவரிடம் கொடுத்து மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். கடனுக்கான பாதி தொகையை கொடுத்துவிட்டு நகையை கேட்டபோது அவர் தர மறுத்தார். தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டலும் விட்டு வருகிறார் என புகாரில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அப்பெண் இதேபோல ஏராளமானவர்களிடம் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார். எனவே உரிய விசாரணை செய்து அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

நூதன முறையில் வங்கியை ஏமாற்றிய வாலிபர்; போலீசார் தீவிர விசாரணை 

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

chennai private bank gold loan incident 

 

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர்  ஹர்சல் சிவாஜி (வயது 33). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தம்புச் செட்டி தெருவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி ஒன்றில் 397 கிராம் அளவிற்கு தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து 15 லட்சத்திற்கு மேல் நகைக்கடன் பெற்று உள்ளார். நகைக்கடன் பெற்றதில் இருந்து கடனுக்கு உரிய அசல் மற்றும் வட்டி கட்டாமலும் அடகு வைத்த நகைகளை மீட்காமலும் இருந்து வந்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து வங்கி சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இவரது நகைகளை ஏலத்தில் விட முடிவு செய்து நகைகளை சோதனை செய்தபோது ஹர்சல் சிவாஜி அளித்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என அறிந்து வாங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோசடி சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் குருலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஹர்சல் சிவாஜி விடுதி ஒன்றில் தங்கி இருப்பது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

 

ஹர்சல் சிவாஜி மேலும் இதே போன்று வங்கிகளில் போலி நகைகளை வைத்து சுமார் 18 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி சம்பவத்திற்கு ஹர்சல் சிவாஜிக்கு உதவியாக இருந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீசார் தேடி வருகின்றனர். போலி நகைகளை வைத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம்  வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.